(+94) 076355634
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
KALEIMAHAL TAMIL M.V.
KALEIMAHAL TAMIL M.V.
  • Register
  • Login
KALEIMAHAL TAMIL M.V.
KALEIMAHAL TAMIL M.V.
  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
    • மாணவர் செயல்திறன்
    • சேர்க்கை
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

வரலாறு

  • வரலாறு
  • நிறுவனர்கள்
  • கடந்த அதிபர்கள்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. வரலாறு மற்றும் மரபுகள்
  4. வரலாறு

வரலாறு

1934.03.05 அன்று ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை முதலில் ஹொப்டன்  தமிழ் வித்தியாலயம் என அழைக்கப்பட்டது. இப் பாடசாலையின் முதல் அதிபராக திரு.கோவிந்தசாமி அவர்கள் 1947 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து கடமையாற்றியுள்ளார். ஹொப்டன் தோட்ட நிர்வாகத்தின் கீழ் இப்பாடசாலை நடத்தப்பட்டது ஆரம்பகாலத்தில் மாணவர் தொகை 150 ஆகவும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 02 ஆகவும் காணப்பட்டது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து அரசாங்கத்தால் பொறுபேற்கப்படும் வரை இப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்களின் விபரம்  வருமாறு

  • 1934 தொடக்கம் 1947 – திரு. கோவிந்தசாமி அவர்கள்
  • 1948 தொடக்கம் 1952 – திரு.இராமகிருஸ்ணன் அவர்கள்.
  • 1952 தொடக்கம் 1959 – திரு.வேலாயுதம் அவர்கள்
  • 1959 தொடக்கம் 1967 – திரு.சுப்பிரமணியம் அவர்கள்
  • 1967 தொடக்கம்1976 – திரு.வேலாயுதம் அவர்கள்


09.06.1977 முதல் இப்பாடசாலை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டபோது அதிபராக திரு.அருணாசலம் அவர்கள் கடமையாற்றினார். அக்காலகட்டத்தில் ஒரு அதிபரும் 03 ஆசிரியர்களும் 150 மாணவர்களும் இருந்தனர். இக்காலப்பகுதியில் பகுதி நேர வகுப்புகளாக பாடங்கள் கற்பிக்கப்பட்டது.

01.06.1992 அன்று முதல் இப்பாடசாலை பது/கலைமகள் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டதுடன் கல்வி பொதுதர சாதாரன தரம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் திரு.சோமசுந்தரம், திரு.கிட்ணசாமி, திரு.நவரட்ணராஜா ஆகியோர் அதிபர்களாக கடமையாற்றினர். 2008 ஆம் ஆண்டு இப்பாடசாலை பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம் என தரம் உயர்த்தப்பட்டு இவ்வாண்டில் கல்வி பொதுதர உயர்தர  வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் திரு.ஸ்கந்தராஜா அவர்களும், உப அதிபராக திருமதி.புஸ்பராணி அவர்களும் கடமையாற்றியதுடன் ஆசிரியர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் மாணவர்களின் எண்ணிக்கை 575 ஆகவும் உயர்ந்து காணப்பட்டது. மேலும் இப்பாடசாலையில் கணினி அறை வாசிகசாலை, விஞ்ஞான ஆய்வுக்கூடம் என்பன கொண்டுவரப்பட்டு கட்டிடங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்ததுள்ளன.

2016 ஆம் ஆண்டு அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்னும் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு தொழினுட்ப அலகு கட்டிடம், ஆரம்பபிரிவு செயற்பாட்டு அறை, வாசிப்பு அறை என்பற்றுக்கான கட்டிடங்கள் வழங்கப்பட்டன. 15.12.2016 அன்று திரு.ஸ்கந்தராஜா அவர்களின் மரணத்திற்கு பிறகு திருமதி.P.மல்லிகா அவர்கள் இடைக்கால அதிபராக கடமையாற்றினார்.


2017.01.25 தொடக்கம் திரு.N.நிரோஷன் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றதுடன், தற்போது பிரதி அதிபராக திருமதி.P.மல்லிகா அவர்களும், உப அதிபராக திரு.P.நிரோஸ்குமார் அவர்களும் கடமையாற்றுகின்றனர். தற்போதுள்ள ஆசரியர்களின் எண்ணிக்கை 38 ஆகவும், ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தரும், கல்வி சாரா ஊழியர்களின் எண்ணிக்கை 8 ஆகவும், மாணவர் தொகை 491 ஆகவும் காணப்படுகின்றது. 2021 இல் World Vision நிறுவனத்தின் மூலமாக திறன் வகுப்பு அறை பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், தற்போது எமது பாடசாலை கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வினைத்திறனுடன் செயற்பட்டு வருகின்றது

KALEIMAHAL TAMIL M.V.

கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம்

பசறை

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • Bd/Kalaimahal T.M.V, Hopton, Passara, Badulla, Sri Lanka

: (+94)076355634

: [email protected]

Supported By

© 2026 KALEIMAHAL TAMIL M.V.. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk