
பாடசாலை கீதம்
மலை சூழ்ந்த ஹொப்டன் ஊரில் அமைந்த
கலைமகள் தமிழ் வித்தியாலயமே
நிலைகொண்டு எம்மை காக்கும்; உந்தன்
நீடிய பணி வாழ்க!
பாவ விழக்கறுப்பாய் புதிய பாதையை நீ வகுப்பாய்
சூரியனை போல் நிலம் எங்கிலும்
ஒளி சுபிட்சத்தை நீ கொடுப்பாய்
(மலை சூழ்ந்த)
இருள் எம்மை விட்டு எங்கும் இன்பமுதே கூடும்
அருள் எல்லாம் அழித்து இந்த அகிலத்தை நீ ஆழ்வாய்
(மலை சூழ்ந்த)
நிலம் எங்கும் உனது புகழ் ஓங்க நித்தமும் நாம் உழைப்போம்
வளம் உற்ற மனிதர்களை ஆக்கும் கலைமகளே வாழி!
தமிழ் எங்கள் உயிராகும்
அது தரணியில் உயர்வாகும்
அமிழ்தெனும் உனது நாமம் என்றும் வாழிய வாழியவே!
(மலை சூழ்ந்த)